×

திருக்குவளை பொறியியல் கல்லூரி நூலகத்திற்கு 102 புத்தகங்கள் வழங்கல்

கீழ்வேளூர், ஏப்.14: நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி நூலகத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கணக்கர் செந்தில்ராசன், மின்சார வாரிய ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் நடராஜன் ஆகியோர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 102 புத்தகங்களை கல்லூரியின் புல முல்வர் துரைராசனிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நூலக ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் துளசி மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thirukuvalai Engineering College Library ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...