ராஜராஜசோழன் செப்புதிருமேனி கும்பாபிஷேகம்

தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி அருகே சோகத்தூரில் மாமன்னர் ராஜராஜசோழன் செப்புதிருமேனி கும்பாபிஷேகம் நடக்கிறது. தர்மபுரி அருகே சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சவுளுப்பட்டியில் உள்ள விடையேறிய பெருமாள் மாமன்னர் ராஜராஜ சோழன் செப்புதிருமேனிக்கு மகாகும்பாபிஷேகம் மற்றும் மாமன்னர் ராஜராஜசோழன் திருமடம் துவக்க விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு சவுளுப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து புனித நீர், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு ஆகியன நடந்தன. மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு பேரொளி வழிபாடு, காலை 9 மணிக்கு விடையேறிய பெருமானுக்கும், மாமன்னர் ராஜராஜ சோழனுக்கும் தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

Related Stories: