மாரியம்மன் கோயிலில் யுகாதி விழா

காரிமங்கலம், ஏப்.14: காரிமங்கலம் மந்தை வீதி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயிலில் யுகாதி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் பொதுமக்கள் கூட்டம் இன்றி விழா கொண்டாடப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காண்ட்லா செட்டியார் சமூகத்தினர் செய்திருந்தனர். இதேபோல், அக்ரஹாரம் ஸ்ரீ ராமர் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதயசங்கர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related Stories:

>