காரிமங்கலம் அருகே களையிழந்த யுகாதி திருவிழா

காரிமங்கலம், ஏப்.14: காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். ஆண்டுதோறும் யுகாதி திருவிழா இப்பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது இப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், யுகாதி பண்டிகை வீடுகள் தோறும் ஆரவாரமிலலாமல் பெயரளவிற்கு கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் காரணமாக, இதேபோல் பண்டிகை பெயரளவிற்கு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>