×

முகக்கவசம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் தர்மபுரி, ஏப். 14: கொரோனா

2வது அலை பரவும் நிலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், முகக்கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தொற்று 2வது அலையை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த, 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. கடந்தாண்டு பரவிய கொரோனா பரவல் முற்றிலும் அடங்கியதால், பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை மறந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்திலும் அதிகபட்சமாக 90 பேர் என்ற அளவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், நகராட்சி, வருவாய்துறை மற்றும் போலீசார், முகக்கவசம் அணியாமல் செல்வோர் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.  தர்மபுரியில் கொரோனா தொற்று பரவி வருவதையடுத்து, சாலையோர கடைகள், மருந்து கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களை, மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இவை 5 முதல் ₹20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...