×

முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் குமரி காவல்துறை மூலம் 1245 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், ஏப். 14: குமரி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வந்த 1245 பேருக்கு காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் 3680 ஹெல்மெட் வழக்கும் போட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  குமரி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் காவல்துறையினரும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று முன்தினம் குமரி மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வந்த 1245 பேரிடம் ₹2 லட்சத்து 49 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. நாகர்கோவில் சரக பகுதியில் 401 பேரிடமும், தக்கலை  பகுதியில் 391 பேரிடமும், குளச்சல்  பகுதியில் 278 பேரிடமும், கன்னியாகுமரி பகுதியில் 175 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் குமரி மாவட்டத்தில் 7 வழக்குகள் போடப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல்  ஹெல்மெட் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 3680 வழக்கு போடப்பட்டுள்ளது.  நாகர்கோவில் சரக பகுதியில் 524 வழக்கும், தக்கலை பகுதியில் 1517 வழக்கும், குளச்சல்  பகுதியில் 753 வழக்கும், கன்னியாகுமரி பகுதியில் 787 வழக்கும் போடப்பட்டது.  தொடர்ந்து சோதனை நடத்தி அபராதம் விதிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...