நாகர்கோவில் மாநகராட்சியில் குறுகிய சந்துகளில் குப்பை சேகரிக்க 96 தள்ளுவண்டிகள்

நாகர்கோவில், ஏப்.14:  நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க புதிய தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சிறிய மற்றும் குறுகிய தெருக்களில் சென்று குப்பைகள் சேகரிக்கும் வகையில், இரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகள் கொண்ட 96 மூன்று சக்கர தள்ளு வண்டிகள், தலா ரூ.12,900 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வண்டிகள்  வார்டு வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் டாக்டர் கின்சால், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>