இரட்டை கொலையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப் 13: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலையை கண்டித்து கோவை  தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கி கூறியதாவது: அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் கொலை செய்யப்பட்ட அர்ஜூன்,  சூர்யா குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்த  கொலையை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கு டும்பத்திற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும். தமிழகத்தில்  நடைபெறும் சாதி வெறி தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்  செயலாளர் அசரப் அலி, வசந்குமார், மணிகண்டன், குணசேகர் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>