மன்னார்புரம் சந்திப்பில் கண்காணிப்பு கேமரா திறப்பு

திசையன்விளை, ஏப்.13: திசையன்விளை அருகே மன்னார்புரம் சந்திப்பில் கண்காணிப்பு கேமரா மற்றும் சிக்னல் திறப்பு விழா நடந்தது. திசையன்விளையை சுற்றிலும் சுற்றுலா தலங்களான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில், கப்பல் மாதாa ஆலயம், ஆற்றங்கரை பள்ளிவாசல், விஜயாபதி ஆகிய இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் யாத்திரிகர்களுக்கு மன்னார்புரம் சந்திப்பு மையப்பகுதியாகும். இப்பகுதியில் விபத்து, குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் மன்னார்புரம் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் ரூ.1லட்சத்தில் சிசிடிவி கேமரா, டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. செல்லத்துரை தலைமை வகித்தார். மணிமாறன் வரவேற்றார். திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திறந்து வைத்து பேசியதாவது, ’இங்கு சிசிடிவி கேமரா அமைத்திருப்பது நம்மை நாமே பாதுகாப்பது போன்றது. குற்றங்கள் நடந்தால், அதனை விசாரிப்பதற்கு பேருதவியாக இருக்கும். இதனை அமைத்த வியாபாரிகள் சங்கத்திற்கு நன்றி’ என்றார். நிகழ்ச்சியில் ரோசாரி, அதிஷ்டபாலன், முத்துக்குமார், விஜயகுமார், சுடலைமணி, லிங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மகாராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>