சேர்ந்தமரம், கடையநல்லூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

சுரண்டை, ஏப். 13: சேர்ந்தமரத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்துவைத்த மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவிவருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும், நீர்மோர் பந்தல் திறக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைத்து கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் சேர்ந்தமரத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலாளர் ராஜா தலைவர் தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி ராமச்சந்திரன், பிரதிநிதி அருண்குமார் முன்னிலை வகித்தனர். சேர்ந்தமரம் கிளைச் செயலாளர் கே. ஆர்.டி.முருகன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், நீர் மோர் வழங்கினார்.

 விழாவில் பெரியதுரை, பாண்டியாபுரம் பிரேம்குமார், கொடி கோபாலகிருஷ்ணன், விவேகானந்தன், அமல்ராஜ், வினோ, முருகன், கணேசன் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணியினர் என திரளானோர் பங்கேற்றனர்.   கடையநல்லூர்: கோடை துவங்கியதையடுத்து  நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கடையநல்லூரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. விழாவுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை, தனுஷ்குமார் எம்பி ஆகியோர் நீர்பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் வழங்கினர். இதில் நகர திமுக செயலாளர் சேகனா, முகமது அலி, மசூது, மைதீன் பிச்சை, நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ஷாஜகான், ஆசாத், முருகையா, ஈஸ்வரன், மாணவர் அணி பெருமாள் துரை, மணிகண்டன், மூர்த்தி,  நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இன்பராஜ், காஜா, அசன், அரபா வகாப், ஆதினம், மயில்சாமி, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கருப்பண்ணன், குட்டி என்ற சீதாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>