தண்டுபத்து அனிதாகுமரன் பள்ளி நிறுவனர் பிறந்த நாள் விழா

திருச்செந்தூர், ஏப்.13: தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர், முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் 89வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் ஆலோசகர் ஆழ்வார், கேபிகேயின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளியின் முதல்வர் மீனா வரவேற்றார். அதனைத்தொடர்ந்து பள்ளியின் ஆலோசகர் ஆழ்வார் மற்றும் பள்ளியின் நிர்வாகஅதிகாரி கண்ணபிரான் பேசினர். விழாவில் பல்திறன் தலைவரான கே.பி.கே.வின் பெருமைகளை 10ம் வகுப்பு மாணவர் சிவராம், 11ம் வகுப்பு மாணவி ஜெனிபர்ஸ்விட்லி, தமிழாசிரியர் ஜேம்சன்கோயில்பிள்ளை, கோகிலா ஆகியோர் எடுத்துரைத்தனர். விழாவில் பள்ளியின் ஆலோசகர், நிர்வாக அதிகாரி, முதல் வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் துணைமுதல்வர் சாந்திஜெய நன்றி கூறினார்.

Related Stories:

>