சேத்துப்பட்டில் அனைத்து குடோன்களும் நிரம்பி உள்ளதால் மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை 20ம் தேதி வரை கொண்டு வரவேண்டாம் கண்காணிப்பாளர் அறிவிப்பு

சேத்துப்பட்டு, ஏப்.13: சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் அனைத்து குடோன்களிலும் நெல் மூட்டைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் வரும் 20ம் தேதி வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி விவசாயிகளின் விளைபொருட்களான நெல், மணிலா மற்றும் சிறுதானிய பயிர்களை கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் 2வது இடத்திலும் மாவட்டத்தில் முதல் இடத்திலும் உள்ளது. இங்கு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சேத்துப்பட்டு வருகின்றனர்.

சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் தற்போது உள்ள 8 குடோன்களிலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் குவிந்து கிடப்பதால் நெல்லுக்கு விலை வீழ்ச்சியும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து தினகரனில் கடந்த 10ம் தேதி செய்தி வெளியானது. இருப்பினும் தொடர்ந்து அரசு விடுமுறை வருவதால் நெல் மூட்டைகளை வைக்க இடமில்லாமல் திடீர் மழையால் சேதம் அடையாமல் இருக்க விவசாயிகள் வரும் 20ம் தேதி வரை மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் என கண்காணிப்பாளர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு பலகைகயில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மார்க்கெட் கமிட்டியின் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் எப்போதும் போல் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். விலை வீழ்ச்சியின் காரணமாக தினகரன் செய்தி எதிரொலியாக தற்போது நெல் மூட்டைக்கு வியாபாரிகள் ₹40 முதல் ₹70 வரை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். நேற்று மட்டும் குடோன்களில் இருந்து 4,868 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குடோன்களில் உள்ள நெல் மூட்டைகள் வெளியேறிய பிறகு நேற்றைய விலை நிலவரம்:

Related Stories:

>