தா.பேட்டை அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 100நாள் வேலை பணியாளர் 3 பேருக்கு கொரோனா தொற்று

முசிறி,ஏப்.13: தா.பேட்டை அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 100நாள் வேலை திட்டப்பணியாளர் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வரத்துவாரி, தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது . இப்பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தற்போது சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  மேலும் சொரியம்பட்டி கிராமம் முழுவதும் எம்.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையில் சுகாதாரப்பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தும். சுகாதார பணிகளை மேம்படுத்தியும் வருகின்றனர்.'

Related Stories:

More
>