மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை

மண்ணச்சநல்லூர், ஏப்.13: மண்ணச்சநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே 6 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12 -ம் வகுப்பு மாணவிகள் மட்டுமே பொதுத்தேர்வு காரணமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோ னா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகின்ற காரணத்தால் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்து இருக்கிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories:

>