×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை 20 பேருக்கு வலை மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி திருச்சி காந்தி மார்க்கெட்காய்கறி வியாபாரிகள் பொன்மலை ஜி.கார்னருக்கு இடமாற்றம்

திருச்சி, ஏப். 13:திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு பொன்மலை ஜி கார்னரில் நேற்றிரவு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வியாபாரி கள் வியாபாரம் செய்ய தயார் நிலையில் ஏற்பாடுகள்  செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு பதிலாக பொன்மலை ஜி.கார்னர் ரயில்வே மைதானத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 11ம் தேதி (நேற்று) முதல் ஜி கார்னரில் சில்லரை வியாபாரிகள் காய்கறி விற்பனையை தொடங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று காந்தி மார்க்கெட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டது.

ஆனால் சில்லறை வியாபாரிகள் பொன்மலை ஜி.கார்னருக்கு செல்ல மறுத்ததுடன், நேற்று காந்தி மார்க்கெட்டில் மற்றொரு பாதையான 6ம் எண் கேட் வழியாக உள்ளே சென்று வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சென்று கடைகளை அப்புறப்படுத்த முயன்றனர். அவர்களுடன் வியாபாரிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை மாநகர துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மொத்த, சில்லறை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இரவு 9 மணி முதல் காலை 10 மணி வரை ஜி.கார்னரில் வியாபாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை வழக்கம் போல் காந்திமார்க்கெட் இயங்கியது. அதே நேரம் ஜி.கார்னர் பகுதியில் கடைகளை இடமாற்றம் செய்வதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்தது. மேலும் இடமாற்றம் செய்யப்படும் கடைகள் அனைத்திற்கும் ஜி.கார்னரில் கடைகள் அமைத்துக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் காய்கனி மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் என சுமார் 1000 கடைகள் பொன்மலை ஜி.கார்னரில் செயல்பட தயாரானது.

காய்கனி அல்லாத மளிகை பொருட்கள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மார்க்கெட்டிலேயே செயல்படும். மேலும் காந்தி மார்க்கெட்டில் மொத்தம் உள்ள 11 கேட்டுகளில் 1 முதல் 5 வரை உள்ள மெயின் கேட்டுகள் பூட்டப்படும். மற்ற சிறிய கேட்டுகள் மக்கள் சென்று வர வசதியாக திறக்கப்பட்டுள்ளது. ஜி.கார்னரில் காய்கறி கடைகள் ஒரு மாதம் வரை செயல்படும். அதன்பின்னர் கொரோனா தாக்கத்தை பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சியில் நேற்று காலை பெய்த திடீர் மழையால் மார்க்கெட் செயல்பட உள்ள பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது.

Tags : Trichy Gandhi Market Vegetable Merchants ,Ponmalai G. Corner ,
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்காய்கறி...