×

வெம்பாக்கம் அருகே சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நூதன போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

திருவண்ணாமலை, ஏப்.13: சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, வெம்பாக்கம் அடுத்த சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, மேளம் அடித்தும், கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியும் நூதன ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:

வெம்பாக்கம் அடுத்த சுனைப்பட்டு கிராமத்தில் கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. ஆனால், இந்த ஆண்டு திறக்கவில்லை. அதை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனையாகாமல் தேங்கியிருக்கிறது.எனவே, உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மேலும், கடந்த 6ம் தேதி தேர்தலுக்காக நூறு நாள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, அந்த நாளுக்கான முழு கூலியை ெதாழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். நூறு நாள் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Tags : Collector's Office ,Sunaipattu ,Vembakkam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...