எழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஏப்.13: எழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு அளித்தனர். போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளிக்க வந்தனர். ஆனால், மனுவை அதிகாரிகள் பெறாததால், அங்கிருந்த பெட்டியில் தங்களுடைய கோரிக்கை மனுவை செலுத்தினர். அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: போளூர் தாலுகா, எழுவாம்பாடி கிராமத்ததில் 650 குடும்பங்கள் உள்ளன. குடியிருப்பு பகுதிக்கு நடுவில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், பள்ளி மற்றும் அங்கன்வாடியும் அந்த இடத்தில்தான் உள்ளன.

எனவே, செல்போன் டவர் அமைத்தால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>