×

குடியாத்தம் தென் குளக்கரை காய்கறி சந்தையில் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்

குடியாத்தம், ஏப்.13: குடியாத்தம் தென் குளக்கரை காய் கறி சந்தையில் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியின்றி காய்கறிகளை வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
குடியாத்தம் தென்குளக்கரை பகுதியில் உழவர் சந்தை, பூ சந்தை, இறைச்சி சந்தை, மீன் சந்தை, மொத்த காய்கறி வியாபாரம், சில்லறைப் காய்கறி சந்தை ஆகியவை ஒரே பகுதியில் இயங்கி வருகிறது. இங்கே விற்பனை செய்ய மற்றும் பொருட்களை வாங்க சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் குடியாத்தம மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிகாலை 3 மணியில் இருந்து வருகை தருகின்றனர். தற்போது கொரோனா தொற்று 2வது அலை வீசி வருகிறது.
இந்நிலையில், குடியாத்தம் காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் குவிந்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளும் முகக் கவசம் அணியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர்.இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் கொரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கையாக உள்ளது.

Tags : Gudiyatham ,South Kulakkara ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்...