வேட்பாளர் மாதவராவ் மறைவு முத்துப்பேட்டை நகர காங். கூட்டத்தில் இரங்கல்

முத்துப்பேட்டை, ஏப்.13: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி கூட்டம் நகர தலைவர் ஜெகபர்அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் சுந்தரராமன், ஹாஜா, வேல்முருகன், குலாம் ரசூல், ஹசன் மாலிக் உள்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Related Stories: