திருவாரூரில் நடந்தது தென்னையில் வேரூட்டம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

நீடாமங்கலம், ஏப்.13: நீடாமங்கலம் அருகே ஆதனூரில் வேளாண் மாணவிகளுக்கு தென்னை வேரூட்டப் பயிற்சி நடந்தது. தஞ்சாவூர் வேளாண் கல்லூரியில் நான்காமாண்டு படிக்கும் மாணவிகள் இந்துமதி, ஐஸ்வரியா, ஜமுனா ராணி, மெரின் ரபின்யா, மோனிஷா, நர்மதா,பிரணவமஞ்சரி, ரம்ளத் பேகம், சாய்லெட்சுமி, செல்வபாரதி ஆகியோர் கிராம பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் செயல்விளக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி நீடாமங்கலம் அருகே ஆதனூரில் மாணவிகள் தென்னை வேர் ஊட்டச் செயல்முறை குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் ஆதனூர் விவசாயிடம் பயிற்சி பெற்ற்னர்.

இதில் தென்னையில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துவது பற்றி பயிற்சி அளித்தனர். முதலில் மோனோகுரோட்டோபாஸ், போரான், அக்ரோமின், கால்சியம் சல்பேட் கொண்ட கரைசலை ஒரு பாலிதீன் பையில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் பென்சில் தடிமன் உள்ள தென்னை இளவேரை இந்தக் கரைசலில் மூழ்கும்படி வைத்து கட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் தென்னையில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது தென்னைமரத்தின் வளர்ச்சியையும் மகசூலை அதிகரிக்கும் என செயல் விளக்கத்துடன் பயிற்சி பெற்றனர்.

Related Stories:

>