கலெக்டரிடம் இயல் இசை நாடக நடிகர் சங்கத்தினர் மனு அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் படுகொலை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.13: அரக்கோணத்தில் நடந்த பட்டியலின இளைஞர்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் தேர்தல் முன் விரோதம் காரணமாக அர்ஜூனன், சூரியா ஆகிய 2 பட்டியலின இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்த கொடூர சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த படுகொலைகளை செய்த சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அரக்கோணத்தில் நடந்த இளைஞர்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகை எம்பியும், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏவும், சிபிஐ மாவட்ட செயலாளருமான சிவபுண்ணியம், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரக்கோணம் இரட்டை படுகொலையை கண்டித்தும், உரிய நீதி வழங்கிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>