திருவாரூர் அருகே தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவாரூர், ஏப். 13: திருவாரூர் அருகே தென்குடி மகா மாரியம்மன்கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவாரூர் அடுத்த பூந்தோட்டம் தென்குடி கிராமத்தில் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் கொடி யேற்றத்துடன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.

அன்னவாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் தினம்தோறும் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருபாலித்து வருகிறார். மேலும், மகோற்சவத்தில் காவடி உற்சவமும், மகா அபிஷேகமும் நடந்தது.இதில், முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காத்தவராய சப்பரத்தை சுமந்தவாறு அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தி மாரியம்மனை வழிபட்டனர்.

Related Stories:

>