×

மஹாவீர்ஜெயந்தி, தொழிலாளர் தினம் ஏப்ரல் 25, மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவாரூர், ஏப்.13: வருகிற 25ம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் வருகிற மே 1ம்தேதி மேதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவற்றை மூட வேண்டுமென திருவாரூர் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது : சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் ஆணையர் கடிதத்தில் அறிவுறுத்தியபடி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் எப்எல் 2 மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் எதிர்வரும் 25.4.2021 (ஞாயிற்றுக்கிழமை) மஹாவீர் ஜெயந்தி மற்றும் 1.5.2021 (சனிக்கிழமை) மே தினம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

மதுக்கூடங்கள் இணைந்த மற்றும் இல்லாமல் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் எப்எல் 2 மற்றும் எப்எல்3 உரிமம் பெற்ற மது அருந்தும் மதுக்கூடங்களை மூடிட வேண் டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மதுபானக்கடைகளின் மேற்பார்வை யாளர்கள் மற்றும் தொடர் புடைய மதுக்கூடங்களின் உரிமதாரர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். தவறும் பட்சத்தில் தொடர்புடைய கடைகளின் உரிமதாரர் மற்றும் சில்லரை மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர் மீது உரியவிதிகளின் கீழ் நடவடி க்கை மேற்கொள்ளப்படும்.

Tags : Mahaveer Jayanti ,Labor Day ,
× RELATED கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி