அரக்கோணத்தில் 2 பேர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,ஏப்.13: அரக்கோணத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை கீழ ராஜவீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரக்கோணம் சோகனூரில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு, அரசு பணி வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் நிறைவுரை ஆற்றினார். ஏஐடியுசி மாநில செயலர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர். கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>