தஞ்சை மாவட்டத்தில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தஞ்சை, ஏப்.13: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே நேற்று முன்தினம் வரை 21,158 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19,848 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,029 பேர் என இருந்தது. இந்நிலையில், புதிதாக மேலும் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,285 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,092 பேர் எனவும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 281 பேர் இறந்துள்ளனர்.

Related Stories:

>