×

கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தல் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு 2வது ேடாஸ் போடவந்த மக்கள் ஏமாற்றம்

தஞ்சை, ஏப்.13: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதனால் 2வது டோஸ் போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்போது, கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பே வந்து விட்டதால், அதுகுறித்து பொதுமக்களிடையே தயக்கம் நிலவியது.

எனவே, பெரும்பாலானோர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். என்றாலும், விருப்பத்தின் அடிப்படையில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 28 நாட்களுக்கு முன் முதல் கட்டமாக கோவேக்சின் தடுப்பூசி 90 பேர் போட்டுக்கொண்டனர். இவர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசி போடுவதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றனர். இவர்களில் 20 பேருக்கு மட்டுமே கோவேக்சின் தடுப்பூசி இருப்பு இருந்தது. எனவே, 70 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால், கோவேக்சினில் முதல் கட்ட தடுப்பூசி போடுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் கோவேக்சின் குறித்து மக்களிடையே தயக்கம் நிலவியதால், தமிழகத்தில் இந்த தடுப்பூசி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 6 மருத்துவமனைகளுக்கு மட்டுமே பரிசோதனை அடிப்படையில் போடப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியை நிறைய பேர் போட்டுக்கொள்ள முன்வந்ததால், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவேக்சின் தீர்ந்துவிட்டதற்கு காரணம் என்றும், விரைவில் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு போடப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, கோவிஷீல்டு எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல், போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Priests' Council ,Grama ,Niladhari ,Kovacs ,Tanjore Medical College ,
× RELATED ஆலோசனை கூட்டம்