போலீசார் மெத்தனம் திருமயம் பகுதியில் கடும் வெப்பத்தை தணித்த கோடை மழை

திருமயம். ஏப்.13: திருமயம் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த திடீர் மழையால் அப்பகுதிகளில் உஷ்ணம் சற்று குறைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் அப்பகுதியில் நீர்த் தேக்கங்களில் உள்ள நீர் கிடுகிடுவென குறைந்ததோடு கடும் வரட்சி நிலவி வந்ததால் மக்கள் உஷ்ணத்தால் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே நேற்று திருமயம், அரிமளம், கே புதுப்பட்டி, ராயவரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களாக அப்பகுதியில் நிலவி வந்த வளிமண்டல வெப்பம் சற்று தணிந்தது. மேலும் நேற்று முழுவதும் அரிமளம், திருமயம் பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வந்ததால் அப்பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

Related Stories:

>