மண்டேலா சினிமா பட டைரக்டர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் முடி திருத்துவோர் சங்கத்தினர் மனு

அரியலூர், ஏப்.13: அரியலூர் முடி திருத்துவோர் சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று கலெக்டரிடம், மண்டேலா படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் கைது செய்ய வேண்டி மனு அளித்தனர். அந்த மனுவில், மருத்துவ சமுதாய மக்களை இழிவுப்படுத்தி மண்டேலா என்ற தமிழ் படம் கடந்த 4ம் தேதி ஒரு தனியார் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குனர் அஸ்வின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இந்த படத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த படத்தை பார்த்ததிலிருந்து தமிழகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ சமுதாய மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இதனால் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>