×

16ம் தேதி நடக்கிறது அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் ஜெயங்கொண்டத்தில் கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய வாரச்சந்தை

ஜெயங்கொண்டம், ஏப்.13: ஜெயங்கொண்டம் பகுதியில் மீண்டும் உருமாறி வரும் கொரோனா அச்சத்தில் வாரச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது முன்பைவிட வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரியலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் வாரச்சந்தைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கீரை, கிழங்கு, காய்கறி போன்றவற்றை விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.

இதனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த 10ம் தேதியில் இருந்து தமிழக அரசு மீண்டும் உருமாறி பரவிவரும் கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு பல தளங்களுடன் கூடிய தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முதல் வார சந்தை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

Tags : Ariyalur Collector ,
× RELATED மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை:...