×

காரைக்காலில் 9,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காரைக்கால், ஏப்.13: கொரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் சேர்த்து மொத்தம் 9066 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. காரைக்காலில் முதல் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 1363 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 1647 பேருக்கும், 60 வயதுக்கும் மேற்பட்டோர் 2945பேருக்கும், 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உடையவர்கள் 2406 பேருக்கும் என 8361பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 486 பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 169 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட 29பேருக்கும், 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 21 பேருக்கும் என 705 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து 9066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...