×

கிழக்கு கடற்கரை சாலையில் மாஸ்க் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.200 அபராதம் போலீசார் அதிரடி வசூல்

நாகை, ஏப்.13: நாகை கிழக்கு கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் வருவோர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணியாமல் வருவோர்கள் மீது ரூ.200 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நாகை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வாகனங்களில் வருவோர்களை நிறுத்தி முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன்படி நேற்று நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முகவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நகராட்சி துறையினர் கண்ணாரத்தெரு கிட்டப்பாஅங்காடி, பேருந்து நிலைய பகுதிகளில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 25 நபர்கள் மீது ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிந்து உள்ளனரா என்று சோதனை மேற்கொண்டனர்.

மேலும் வணிக நிறுவனங்களில் பாதிக்கும்மேல் கூட்டம் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் வழக்கம்போல் கூட்டம் கூடிவிடுகின்றனர், அவர்களை தடுக்க இயலவில்லை. வழக்கம்போல் கூடும் கூட்டம் உள்ள கடைகளுக்குச் சென்ற போலீசார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்விதித்து வசூல் செய்கின்றனர்.

Tags : East Coast Road ,
× RELATED பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில்...