இரட்டை கொலை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

நாகை, ஏப்.13: இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சம்பந்தம் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். நாகை எம்பி செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அரக்கோணத்தில் தலித் மீது நடத்தப்பட்ட இரட்டை கொலையை வன்மையாக கண்டிப்பது.

குற்றவாளிகளை வன்கொடுமை மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, ஏஐடியூசி மீனவர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>