×

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் திருக்கல்யாணம்

சீர்காழி, ஏப்.13: சீர்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் அமிர்த ராகுபகவான் காட்சி தருகிறார். ஆதிஇராகு ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தம்பதி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் வாசுகியாகிய பாம்புக்கு காட்சி தரும் விழா நடைபெறும்.

இவ்வாண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலை பஞ்சமூர்த்திகள், ராகுபகவான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதையடுத்து ராகுபகவான் வனத்துக்கு செல்லுதல், ராகு பகவானுக்கு காட்சி தரும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தததும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கே ற்று சாமிதரிசனம். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Tirukkalyanam ,Sirkazhi Nageswaramudaiyar Temple ,
× RELATED பழநியில் குவியும் பாதயாத்திரை...