நாடக நடிகர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு நெரூர் அருகே கக்கன் திறந்து வைத்த வானொலி நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

கரூர், ஏப்.13: கரூர் மாவட்டம் நெரூர் அருகே என்.புதுப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள ரேடியோ நிலையத்தை சீரமைத்து இந்த பகுதியினர் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் பகுதியில் உள்ள என்.புதுப்பாளையம் பகுதியில் வானொலி ஒலி பெருக்கி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1959ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அன்று அப்போது மாநில மராமத்து அமைச்சராக இருந்த கக்கன் என்பவரால் இந்த ரேடியோ நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

ரேடியோ நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு ஒரு காலத்தில் பயன்பாட்டில் இருந்த இதன் நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கடும் வெயில் காலங்களில் இந்த பகுதியினர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் மையமாக இந்த ரேடியோ நிலையம் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது யாரும் பயன்படுத்திட முடியாத நிலையில் ரேடியா நிலையம் உள்ளது என கூறப்படுகிறது. எனவே, பழமை வாய்ந்த இந்த ரேடியோ நிலையத்தை புதுப்பித்து, அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More