தேனியில் திடீர் மழை

தேனி, ஏப். 13:  தேனி மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் கொரோனா தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெயில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடந்த இருதினங்களாக மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கருமேகம் சூழ்ந்த நிலையில் மழை பெய்யும் சூழல் இருந்தது.  கொரோனா அதிகரித்து வரும்நிலையில் தேனியில் திடீரென பெய்து வரும் மழையால் நோய்த்தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Related Stories:

>