பெரியகுளம் பகுதியில் துவங்கியது 2ம் போக நெல் நடவு பணி

பெரியகுளம், ஏப்,13:  பெரியகுளம் பகுதியில் குளம் மற்றும் கிணற்று நீரைப்பயன்படுத்தி இரண்டாம் போக நெல் நடவு  பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வந்துள்ளது.  இந்நிலையில் குளத்து நீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள வடகரை பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடியை துவக்கி முதல் போக நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பகுதியில் ஒரு போகம் நெல் குளத்து நீரைபயன்படுத்தியும் இரண்டாம் போகம் கிணற்று நீரை பயன்படுத்தியும் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் நீரை பயன்படுத்தி என்.எல்.ஆர் என்ற ரக நெல் நடவு செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>