பிள்ளையார்பட்டி கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்

திருப்புத்தூர், ஏப்.13: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதித்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்டோர் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும், சிற்றுண்டிச் சாலைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சுவாமி சிலைகளை தொடுவதையும், தேங்காய், பூ, பழம் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும்.கோயில் திருவிழா வீதியகஷ உலா போன்றவற்றில் அரசின் இயக்க நடைமுறை அமலில் இருப்பதால், கோயில் வழக்கப்படியும், ஆகம விதிகள்படியும், பூஜைகள், கைங்கர்யங்கள் நடைபெறும். பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

Related Stories:

>