ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

சிவகங்கை, ஏப்.13: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில்: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022ம் பருவத்தில் எட்டாம் வகுப்பிற்கு மட்டுமே சேர்வதற்கு 5.6.2021அன்று நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.4.2021ஆகும். விண்ணப்பதாரர் 1.1.2022 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.(1.1.2009க்கு முன்னதாகவும் 1.7.2010க்கு பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது) கூடுதல் விபரங்களை www.rimc.gov.in என்ற ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி இணையதளத்தில் அறியலாம். இந்த வாய்ப்பின் மூலம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>