குழாய்கள் பழுது பார்க்கும் பணிக்காக ஏப்.15ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் மாநகராட்சி அறிவிப்பு

மதுரை, ஏப்.13: மதுரை மாநகராட்சி குடிநீர் விநியோக பிரதான குழாய்களில் பழுதுபார்க்கும் பணி நடப்பதால் ஏப்.15ம் தேதி ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.  

இது குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் வைகை குடிநீர் திட்டப்பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் இரண்டாம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அருள்தாஸ்புரம் பாலம் அருகே, வைகை ஆற்றின் வடகரையில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து குடிநீர் வீணாவது தடுக்கப்படும். சொக்கிகுளம் பகுதியில் மேம்பாலப் பணிகளுக்கு இடையூறாக உள்ள குழாய்களை மாற்றி, வேறு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக ஏப்.15ல் ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன்படி அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், மீனாட்சிபுரம், குலமங்கலம் ரோடு, கோரிப்பாளையம், ரேஸ்கோர்ஸ் காலனி, டிஆர்ஓ காலனி, பி அன்ட் டி காலனி, பீபீகுளம், நரிமேடு, புதூர், அண்ணாநகர், கேகேநகர், மதிச்சியம், கரும்பாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், எச்எம் காலனி, விராட்டிப்பத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம், டிவிஎஸ் நகர், முத்துப்பட்டி, அழகப்பன்நகர், கீரைத்துறை, வில்லாபுரம் மற்றும் அதனைச் சாந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தவும், அத்தியாவசிய வார்டு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories: