×

மதுரையில் அதிகாரிகள் அதிரடி முகக்கவசம் அணியாமல் டூவீலரில் வந்தவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’ காரில் இருந்தவர்களும் தப்பவில்லை

மதுரை, ஏப். 13: மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஸ், நேற்று  கோரிப்பாளையம், அரசரடி, நாகமலை புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் விசிட் செய்து, முகக்கவசம் அணியாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியாமல் வாகனங்களில் வந்தவர்களிடம், ‘உங்களது நன்மைக்காக முகக்கவசம் அணிய வேண்டும். இதில், அலட்சியம் காட்டக்கூடாது’ என அறிவுறுரை கூறினார். பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காரில் வந்தவர்களும் தப்பவில்லை: இதேபோல, மதுரை திருமோகூர் ரோட்டில் தாசில்தார் லயனால் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். சிலர் கார்களில் அமர்ந்து கொண்டு, முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, மதுரையில் மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்நிலையம் பகுதியில் கட்டபொம்மன் சிலை, சிம்மக்கல், கீழவாசல், கீழமாசிவீதி, மேலமாசிவீதி, காளவாசல், பழங்காநத்தம், ஆரப்பாளையம், தெற்குவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார், வருவாய்த்துறையினருடன் இணைந்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...