கொரோனா அறிகுறி இருப்பின் ரயில் பயணத்தை தவிருங்கள் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள்

மதுரை, ஏப். 13: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் பயணிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோள். ரயில் பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் மட்டுமல்லாமல், ரயில் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணம், கூட்டமாக பயணம் செய்தலை தவிர்க்க வேண்டும். ரயில் நிலைய நடைமேடை, பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் சமூக இடைவெளி வேண்டும். காய்ச்சல், இருமல், சளி இருந்தால் ரயில் பயணத்தை தவிருங்கள். பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு, தனிமைப்படுத்துதல் ஆகியவை இருந்தால் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும். ரயில் பயணத்தின்போது உணவு, தண்ணீர், கிருமி நாசினி குப்பி, சோப்பு ஆகியவற்றை சொந்தமாக கொண்டு செல்லவும். ரயில் நிலையங்களில், ரயில் பெட்டிகளில் எச்சில் துப்பக் கூடாது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் அரசு அறிவித்தபடி இ.பாஸ், இ.ரிஜிஸ்டிரேஷன், பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே மற்றும் மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கும் விதி முறைகளை ரயில் பயணிகள் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>