திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

திண்டுக்கல், ஏப். 13: ஆத்தூர் வீரசிங்கம் பட்டியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த விபத்து ஒன்றில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக சரக்கு வாகனத்தில் திண்டுக்கல் மின்மயானம் வந்து விட்டு ஊருக்கு திரும்பினர். திண்டுக்கல்- வத்தலகுண்டு ரோடு வக்கம்பட்டி அருகே வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் அனுமதித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>