திண்டுக்கல்லில் வக்கீல் கார் எரிப்பு

திண்டுக்கல், ஏப். 13: திண்டுக்கல் யூசுபியா நகரை சேர்ந்தவர் அம்சா. வழக்கறிஞர். இவரது காருக்கு நேற்று அதிகாலையில் தீ வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திண்டுக்கல் கொட்டபட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது நிலத்தை திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் குறித்து தாலுகா போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது நாகராஜ்க்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற வழக்கறிஞர் அம்சா ஆத்திரமடைந்து சரவணனை தாக்கியதாக தெரிகிறது. இந்த முன்விரோதத்தில் கார் எரிப்பு சம்பவம் நடந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories:

>