பழநியில் குப்பை வரியை குறைக்க வேண்டும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

பழநி, ஏப். 13: பழநியில் குப்பை வரியை குறைக்க வேண்டுமென ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் நகர அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஆலோசனை கூட்டம் கண்பத் கிராண்ட் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக ஜே.பி.சரவணன், செயலாளராக கிருஷ்ணன், பொருளாளராக செந்தில்குமார், கௌரவ ஆலோசகர்களாக வேலுமணி, கந்தவிலாஸ் பாஸ்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பழநி வரும் பக்தர்களுக்கு வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும். சங்கத்தின் சார்பில் முகக்கவசம் வழங்க வேண்டும். பழநி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு விதிக்கப்படும் குப்பை வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>