பட்டிவீரன்பட்டியில் மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

பட்டிவீரன்பட்டி, ஏப். 13: பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (75). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த இருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>