ஆத்தூர் மாலப்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சரிசெய்ய கோரிக்கை

சின்னாளபட்டி, ஏப். 13: ஆத்தூர் மாலப்பட்டியில் குழாய்கள் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி கழிவுநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆத்தூர் ஊராட்சி மாலப்பட்டியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீர் அதிகளவில் வெளியேறி கழிவுநீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை சரிசெய்ய முன்வரவில்லை. மேலும் மாலைப்பட்டி மயானத்திற்கு செல்லும் வழியை அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும்

அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தெரு குழாய்கள் உடைப்பை சரிசெய்வதுடன், மயானம் செல்லும் பாதையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>