×

ஆத்தூர் ஊராட்சியில் கேள்விக்குறியாகும் திடக்கழிவு திட்டம் குப்பைகளை எரிப்பதால் விளைநிலங்கள் பாதிப்பு

சின்னாளபட்டி, ஏப். 13: ஆத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் குப்பைகளை குழியில் கொட்டி எரிப்பதால் விளைநிலங்கள் பாதிப்படைகின்றன. ஆத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில், வர்த்தக நிறுவனங்களில் சேகரிக்கும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து அதை மக்கும், மக்காத குப்பைகளை முறையாக பிரித்து மறுசுழற்சி செய்வர். ஆனால் சமீபகாலமாக இப்பகுதியில் இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கூட்டுறவு வங்கிக்கு மேற்குப்புறம் குழிதோண்டி, அதில் கொட்டி தினசரி எரித்து வருகின்றனர். இதனால் காற்று மாசு அடைகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் கரும்புகை கிளம்பி கரித்துகள்கள் அருகிலுள்ள நெல் வயல்களில் படர்ந்து விடுகிறது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கும், மக்காத குப்பைகளை முறையாக பிரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Attur panchayat ,
× RELATED ஊழல் புகார் 2 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவி நீக்கம்