ஆத்தூர் சடையாண்டி கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு பக்தர்கள் குவிந்தனர்

சின்னாளபட்டி, ஏப். 13: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை அடிவார கோயில்களில் ஆத்தூர் சடையாண்டி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் அமாவாசையன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இம்மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சேவல், கிடா வெட்டி பலி கொடுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related Stories:

>