×

கொரோனா தொற்று அதிகரிப்பால் 4 கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைப்பு

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரிப்பதால் 4 கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கெரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வயதானவர்கள், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருமே தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரகூடாது. காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்தால், தாங்களாகவே சிகிச்சை மேற்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.நோய்த்தொற்றால், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் திறக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 3,85,834 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12,532 பேர் கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்கள் என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 111 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில்உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனைபடி, வீடுகளில் 80 பேர் தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 17 பகுதிகள் கட்டுபாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட எஸ்பி சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா