பரமத்திவேலூர் அருகே விவசாயி சடலம் மீட்பு

பரமத்திவேலூர், ஏப்.13:பரமத்திவேலூர் அடுத்துள்ள பொய்யேரி ராஜவாய்க்கால் பாலம் அருகே விவசாயி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள பொய்யேரி ராஜவாய்க்கால் பாலத்திற்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொய்யேரி சேக்கான் தோட்டத்தை சேர்ந்த ரமேஷ்(45), விவசாயி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் வாய்க்காலில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இது கொலையா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: